அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் சாலை போடப்பட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறத. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மழை அதிகமாக பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.