குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-31 14:40 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள்,இணைப்புச் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.கல்யாணசுந்தரம்,கும்பகோணம்


மேலும் செய்திகள்