சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் கிராமத்தில் புளியம்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் சோலையன் தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் சேறும், சகதியுமான சாலையில் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-தினேஷ்குமார், புளியம்பட்டி, சேலம்.