ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதியில் பஸ்கள் திரும்பும் இடத்தில் திடீர் பள்ளம் உருவாகி உள்ளது. ஏற்கனவே அங்கு பள்ளம் ஏற்பட்டபோது தற்காலிகமாக மண் நிரப்பப்பட்டு பள்ளம் மூடப்பட்டது. ஆனால் நிரந்்தர தீர்வு காணப்படாததால் மீண்டும் பள்ளம் உருவாகி உள்ளது. எனவே பள்ளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.