கடலூர் அருகே காரைக்காடு கருணாகரன் தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சாவாலாக உள்ளது. சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.