சேறும், சகதியுமான பள்ளி மைதானம்

Update: 2022-08-29 16:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி, பள்ளி நுழைவுவாயில் அருகே குளம்போல உள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாத சூழல் உள்ளது. அதேபோல கட்டிக்கானப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளி மாணவர்கள் நடந்து சென்றனர். பள்ளி முன்பு தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், ஜக்கப்பன் நகர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்