ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு எதிரே சந்து உள்ளது. இந்த சந்தானது ஜான்சி நகருக்கு செல்கிறது. சந்து பகுதியில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது. ஆனால் மீண்டும் சாலை போடப்படவில்லை. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும்.