சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-29 12:05 GMT


தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ஆர்சுத்திப்பட்டு நெல் கொள் முதல் நிலையத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆர்சுத்திப்பட்டு

மேலும் செய்திகள்