கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகப்பள்ளி ஊராட்சி ராஜேஸ்வரி லே அவுட் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதிக வாகன போக்குவரத்துள்ள இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவதாஸ், பேகப்பள்ளி, கிருஷ்ணகிரி.