சூலூர் அருகே சங்கோதிபாளையம் மாரியம்மன் கோவில் முதல் மில் டெக்ஸ் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அனைத்து தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் வாகன விபத்துகள் நடக்கிறது. இதேபோல் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதான சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?