அத்தாணி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கொண்டுவந்து போடப்பட்ட கற்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இந்த வழியாக நாள்தோறும் 100-க்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் கற்கள் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்களை அகற்ற ஆவன செய்வார்களா?