தார்ச்சாலை அமைக்கப்படுமா ?

Update: 2022-08-27 13:04 GMT


திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு செல்லும் மெயின் ரோட்டில் நால் ரோட்டில் அமைந்திருக்கும் செந்தமிழ் நகரில் தார்சாலை இது வரை அமைக்கப்படவில்லை. தற்போது உள்ள மண் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி. 

மேலும் செய்திகள்