சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு பகுதியில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஓடை செல்லும் சாலை என்பதால் பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்த பாலத்தை மூடிய வேலையாட்கள் ஜல்லி கற்களை அகற்றாமல் அப்படியே போட்டு விட்டனர். அதனால் ஆத்தூர்- திருச்சி சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் சைக்கிள் பஞ்சர் ஆகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கற்களை அகற்றிவிட்டு தார்சாலை அமைக்க வேண்டும்.
-இளவரசன், கெங்கவல்லி, சேலம்.