திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகில், மற்றும் அங்கு உள்ள மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே சாலையில் வேகத்தடை உள்ளது. இதில் உள்ள இரண்டு வேகத்தடைகளிலும் வெள்ளைக் கோடுகள் இல்லை. இதனால் வேகமாக வரும் வாகன ஒட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வந்து விபத்தில் சிக்குகின்றனர்.உடனடியாக திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள இரண்டு வேகத்தடைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வண்ணம் பூச வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.