திட்டக்குடி அருகே தொழுதூர் நெடுஞ்சாலை வைத்தியநாதபுரம் சாலையில் பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வைத்தியநாதபுரம், ஆலத்தூர், சித்தூர், கீழக்கரைப்பூண்டி, வடகராம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.