அறச்சலூர் போலீஸ் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தாழ்வான பகுதி என்பதால் தற்போது மழை தண்ணீர் அங்கு குளம்போல் தேங்கியுள்ளது. கால்நடைகள் அதில் குளிக்கின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளமான இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.