சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் வலதுப்புற சர்வீஸ் ரோட்டில் இருந்து மேத்தா நகருக்குள் நுழையும் இடத்தில் சாலை மோசமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நடந்துகூட செல்லமுடியாத அளவிற்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க முன் வர வேண்டும்.
-கணேஷ், திருவாக்கவுண்டனூர், சேலம்.