குண்டும், குழயுமான சாலை

Update: 2022-08-25 14:23 GMT


தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அய்யாசாமி வாண்டையார் நினைவு பழைய பேருந்து நிலையம்.இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், அண்ணா சாலையிலிருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் பஸ் நிலையம் நுழைவு வாயிலில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ர.அன்பழகன் தஞ்சாவூர்

மேலும் செய்திகள்