தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா ஆணந்தவள்ளி வாய்க்கால் வடகரையில் உள்ள பேராவூரணி-கழனிவாசல் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.