ரிஷிவந்தியம் அருகே புஷ்பகிரி -இளையனார்குப்பம் சாலையில் அரும்பராம்பட்டு பிரிவு சாலையில் வளைவு ஒன்று உள்ளது. இந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. அவ்வாறு செல்லும்போது சில நேரங்களில் வளைவு பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.