சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-24 14:58 GMT

சேலம் களரம்பட்டி மெயின் ரோடு புத்துமாரியம்மன் கோவில் அருகே நெல்குத்தி பாறையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த பகுதி மழைக்காலங்களில் மிகவும் சேறும், சகதியுமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எதிர்பாராத நேரத்தில் வாகனத்தில் வரும்போது பெற்றோர்களும் குழந்தைகளும் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அங்கு சமுதாயம் கூடம், கால்நடை மருந்தகமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.

-ரவிகுமார், களரம்பட்டி மெயின்ரோடு, சேலம்.

மேலும் செய்திகள்