கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ராஜீவ் நகர் 2-வது தெருவில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சாலையில் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-அகிமா, பெத்ததாளப்பள்ளி, கிருஷ்ணகிரி.