வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-24 14:37 GMT


தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் உள்ள தெருக்களுக்கு செல்ல ராஜன் சாலை, ராஜாஜி சாலை, கிரி சாலை, காமராஜர் சாலை என 6 சாலைகள் அமைந்துள்ளன.இந்த ஆறு சாலைகளும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழுவதுமாக சீரமைக்கப்பட்ட நிலையில், நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும் காமராஜர் சாலையில் அரசு உதவிபெறும் மழலையர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்