ஈரோடு ஆசிரியர் காலனி மாதவி வீதியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுகிறது. மேலும் குடிநீர் தொட்டி அருகே சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?