மோசமான சாலைகள்

Update: 2022-08-24 11:56 GMT

நாமக்கல் நகராட்சி 6வது வார்டில், நாமக்கல் நகரில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள எஸ்.பி.கே. நகர், மகரிஷி நகர், கே.கே.கே. நகர் மற்றும் இதர பல குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் செல்லும் பிரதான சாலை அய்யம்பாளையம் பகுதியிலுள்ள திருச்செங்கோடு சாலையிலிருந்து செல்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் வழியில் மட்டுமே தார்சாலை அமைக்கப்பட்டு குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மண் சாலை மட்டுமே நீண்ட காலமாக இருந்துவருகிறது. சேறும், சகதியும் இருப்பதால் பலமுறை வாகனங்களிலிருந்து தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலைவசதி செய்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்