போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-24 09:54 GMT

கோவை சவுரிபாளையத்தில் பெட்ரோல் நிலையம் அருகே குறுகலான ஒரு வழிப்பாதை உள்ளது. இதன் வழியாக காமராஜர் சாலைக்கு செல்லலாம். இங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சாலை குறுகலாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றுமு் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு பலமுைற புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அங்கு போக்குவரத்து நெரிசல் தீர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது