கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கத்திரிப்பள்ளி கிராமத்திலிருந்து நடுசாலை கிராமத்திற்கு செல்லும் தார்சாலை 3 கி.மீ. தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், கத்திரிப்பள்ளி, கிருஷ்ணகிரி.