சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-22 17:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மோர்னப்பள்ளி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை மண் சாலையாக உள்ளது. இந்த சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவசர காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், மோரனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்