பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் தவறி அந்த பள்ளத்திற்குள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.