சிதிலமடைந்த சிமெண்டு சிலாப்புகள்

Update: 2022-08-22 15:01 GMT
பெங்களூரு லேடி கர்சோன் சாலையில் பவுரிங் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையோர நடைபாதையில் சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. இதில் சில சிலாப்புகள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் பள்ளத்தில் தவறிவிழும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்