செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் முறையாறு, அம்மனூர் கூட்ரோடு, கரியமங்கலம், கொட்டகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கரியமங்கலம் முதல் கொட்டகுளம் வரை சாலையை பெயர்த்து எடுத்து விட்டு தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் முறையாக மண் கொட்டி சமன் செய்யப்படாததால் கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. சாலை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிவச்சந்திரன், கரியமங்கலம்