பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மலைக்குன்றின் மீது அமந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் தங்களது சொந்த பயன்பாட்டு வாகனங்களில் வந்து செல்கின்றனர். செட்டிகுளம் ஆலத்தூர் கேட் சாலையில் இருந்து கோவிலுக்கு செல்லும் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள தார் சாலை சுமார் 5 ஆண்டுகளாக சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.