தர்மபுரி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிழக்கு பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுக் கருவிகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பூங்காவில் உள்ள விளையாட்டுக் கருவிகளை சீரமைக்க வேண்டும். இந்த பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி புதுப்பொலிவுடன் பூங்கா மீண்டும் பயன்பாட்டிற்கு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?