பராமரிப்பு இன்றி காணப்படும் காந்தி பூங்கா

Update: 2026-05-10 11:11 GMT

புதுக்கோட்டை நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான காந்நி பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வந்து நடை பயிற்சி செய்து பயனுள்ள வகையில் பொழுதை கழித்து வந்தனர். பூங்காவில் இரண்டு செயற்கை நீரூற்றுகள் இருந்தது. அதில் ஒன்று மூடப்பட்ட நிலையில், மற்றொன்றும் கடந்த ஒரு வருட காலமாக செயல்படாமல் உள்ளது. மணிக்கூண்டு குளம் முழுக்க பாசி படர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் கொசுக்கள் உள்பத்தியாகும் பண்ணையாக பூங்கா மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்