பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2026-05-03 16:06 GMT

 சிவகங்கை மாவட்டம் கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் சிறுவர்கள் மிகவும் சிரமமடைவதோடு, சிறுவர்களின் கை, கால்களில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் சேதமடைந்த உபகரணங்களை சரி செய்யவும், முறையாக பராமரிக்கவும் முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்