மதுரை வைகை வடகரை ஓபுளா படித்துறை, சாலையோர பூங்கா பல நாட்களாகவே பராமரிப்பின்றி பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் இப்பூங்காவின் உள்ளே புதர்கள் மண்டியும், குப்பைகள் நிறைந்தும் காட்சியளிக்கிறது.தற்போது சித்திரை திருவிழா தொடங்கி உள்ள நிலையில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் பூங்காவினை ஆக்கிரமித்துள்ள புதர்கள், குப்பைகளை அகற்றி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?