சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பெரியகடை வீதி பகுதியில் உள்ள பேரூராட்சி சிறுவர் பூங்காவில் உள்ள சில விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. அத்துடன் பூங்காவில் போதிய விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு விளையாட வரும் சிறுவர்- சிறுமிகள் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்கவும், விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?