அரியலூர் விளையாட்டு அரங்கத்திற்கு குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து நடைப்பயிற்சி செய்கின்றனர். இந்நிலையில் விளையாட்டு அரங்கத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.