மதுரை திருப்பரங்குன்றம் சூரக்குளம் பகுதியில் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்ளனர். ஆனால் இப்பகுதியில் தற்போது வரை விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. இதனால் மாணவர்கள் பயிற்சி எடுப்பதற்கு தொலை தூரம் சென்று வந்து சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் விளையாட்டு மைதானம் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.