சிவகங்கை மாவட்டம் வள்ளனேரி ஊராட்சி கீழக்கண்டனி கிராமத்தில் உள்ள மீனாட்சி நகர் அருகில் உடற்பயிற்சி கூடம் கட்டி திறக்கப்படாமல் இருந்தது. இதனை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது மேற்கண்ட உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. எனவே தங்களது புகாரை தினத்தந்தி புகார் பெட்டி மூலம் வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.