பொதுமக்கள் அவதி

Update: 2025-10-05 07:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் மேட்டு தெருவில் குடியிருப்புவாசிகளின் குடிநீர் ஆதாரமாக சில வருடங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து கிணறு இருந்தது. ஆனால் தற்போது அது தூர்வாரப்படாமல் மணல் நிறைந்து குப்பை கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாறிவிட்டது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புவாசிகளுக்கு டெங்கு பரவும் அபாயநிலை உருவாகி உள்ளது. இது தீவிரமடைவதற்கு முன்பாக கிணறை அங்கிருந்து அகற்ற அல்லது பயனற்று கிடக்கும் கிணறை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்