பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2025-08-31 13:08 GMT

ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் அருகே சிறுவர் பூங்கா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் புதர்மண்டி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத அவல நிலை இருந்து வருகிறது. மக்களின் நலன் கருதி இந்த பொழுதுபோக்கு பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-மணி, ஓசூர்.

மேலும் செய்திகள்