பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-03 17:03 GMT

தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் 2 வழி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள இந்த பூங்காவை சீரமைக்கவும், இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகேசன், தர்மபுரி.

மேலும் செய்திகள்