கம்பம் நந்தகோபால்சாமி நகரில் உள்ள சிறுவர்கள் பூங்கா பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் இருக்கிறது. இதனால் பூங்காவில் விளையாடுவதற்காக குழந்தைகளை அழைத்துவரவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பூங்காவை விரைந்து சீரமைக்க வேண்டும்.