சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள நண்பர்கள் நகர் பூங்காவை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்தநிலையில் இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பொதுமக்கள் பயனபடுத்த முடியாதவாறு கிடக்கிறது. பழுதடைந்த உபகரணங்களும் மாற்றப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.