சென்னை நங்கநல்லூரில் உள்ள சுதந்திர தின பூங்காவை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பூங்காவின் பெயர் பலகை அமைக்கபட்டிருக்கும் இடத்திற்கு முன்பாக சிலர் போஸ்டர்களை ஒட்டியும், விளம்பர பதாகைகளை வைத்தும் பூங்காவை அசுத்தம் செய்கின்றனர். இதனால் பூங்காவின் தோற்றம் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுற்றி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.