பழனி ராஜாநகரில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் போதிய பராமரிப்பு செய்யாததால் தற்போது அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. பூட்டியே உள்ளதால் ராஜாநகர், சண்முகபுரம் பகுதி சிறுவர்கள் விளையாட இடம் இன்றி சாலைகளில் விளையாடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பழனி ராஜாநகர் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.