காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

Update: 2025-02-16 11:08 GMT

கூடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பின்புறம் உள்ள சாலையில் காட்டுப்பன்றிகள் புதர்களுக்குள் முகாமிட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு, பகல் என எந்த நேரமும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளதால், அவை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் காட்டுப்பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்