புதுச்சேரி கடற்கரைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவில் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சீஷா போன்ற விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இங்குள்ள உபகரணங்கள் பல சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அதில் விளையாடும் குழந்தைகளுக்கு காயம் ஏற்படவாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.