பழனியை அடுத்த ஆயக்குடியில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்காவில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.